தர்மபுரி மாவட்டத்தில் புகார் எண் 1077

"தர்மபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத சாயப்பட்டறைகள் நடப்பது குறித்து கட்டணமில்லாத டெலிஃபோன் எண் 1077ல் புகார் செய்யலாம்.கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி சாயபட்டறைகள் இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததை தெடார்ந்து ஜூலை மாதம் 19ம் தேதி அரூர் ஆர்.டி.ஓ., வேடகட்டமடுவு, தாம்பல் கிராமத்தில் தணிக்கை செய்து தென்பெண்ணையாற்றில் அனுமதியின்றி இருந்த இரு சாயப்பட்டறைகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தினார்.

இதே போல் ஆகஸ்ட் 11ம் தேதி தர்மபுரி தாலுகா ஈசல்பட்டியில் 14ம், டொக்குபோதைனஅள்ளி கிராமத்தில் இரண்டு, பூவல்மடுவு கிராமத்தில் ஒரு குடோன் ஆகியவற்றை அனுமதியின்றி இயக்கப்பட்டது கண்டறியப்பட்டு, தாசில்தார் கமலநாதன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மாசு கட்டுப்பாடு காரணமாக சாயப்பட்டறைகள் அரசு உரிமங்கள் ரத்து செய்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அனுமதியில்லாமல் தர்மபுரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் ஆசை வார்த்தைகள் கூறி சாய பட்டறைகளை நிறுவி வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் தண்ணீர் மாசு அடைந்து விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் ஆகியவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் நிலையுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சாய பட்டறைகள் அமைக்க யாருக்கும் இது வரையில் உரிமம் வழங்கப்படவில்லை. எனவே இது போன்று அரசு அனுமதியில்லாமல், சட்டத்துக்கு புறம்பாக சாயப்பட்டறைகள் அமைத்து செயல்படுகிற இனங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிய வந்தால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டணம் இல்லாத டெலிஃபோன் எண் 1077ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

No comments: