100 முட்டைகளை ஒரே நிமிடத்தில் தலையால் உடைத்து திருச்சி பெண் சாதனை


திருச்சியை சேர்ந்த பெண் கராத்தே மாஸ்டர் ஒருவர், தன் முகத்தின் நெற்றிப் பொட்டால், 100 முட்டையை ஒரு நிமிடத்தில் உடைத்து, "சாதனை' செய்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி கி.ஆ.பெ., மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், இரண்டு தேசிய சாதனை மற்றும் ஒரு உலக சாதனை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.திருச்சியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ, எட்டு எம்.எம்., கொண்ட ஐந்து இரும்புக் கம்பிகளை கண் புருவத்தால் வளைத்தார்.

டில்லியில் பவித்ராகோகார் என்ற பெண், ஒரு நிமிடத்தில், 84 முட்டைகளை தலையில் உடைத்து தேசிய சாதனை செய்திருந்தார். தற்போது திருச்சியில் ஒரு நிமிடத்தில், 100 முட்டைகளை நேற்று தன் நெற்றிப் பொட்டால் உடைத்து, சசிகலா ஜெட்லீ புதிய சாதனை படைத்தார்.உ.பி., மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அஞ்சுல் டோமர் என்ற மாணவர், ஒரு நிமிடத்தில், 120 முட்டைகளை உடைத்து தேசிய சாதனை படைத்தார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மாணவர் முனிஸ்பாண்டி, நேற்று ஒரு நிமிடத்தில், 130 முட்டைகளை உடைத்தார்.ஜெட்லீயின் உலக சாதனை முயற்சி மற்றும் சசிகலா, முனிஸ்பாண்டியின் தேசிய சாதனை முயற்சிகள், வீடியோ பதிவுகளாக, லண்டனில் உள்ள கின்னஸ் மற்றும் டில்லியில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவர்களின் அங்கீகாரத்துக்கு பிறகு இவர்களின் சாதனை உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலோ, தேசிய சாதனையாக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலோ பதிவு செய்யப்படும்.

2 comments:

Anonymous said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் said...

வாழ்த்துக்கள்