காந்தத் தொடர்- நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 3

by 10:34 AM 6 comments

காந்தத் தொடர்- நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 2

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்

உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி .

ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன .

எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை ,நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் ,நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும் , நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் ,கார் வாங்க வேண்டும் ,நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது ,நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள் .எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.

எண்ணங்கள் காந்த சக்தி உடையவை ,நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன ,அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன ,பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் ,அந்த மூலம் தான் நீங்கள் .

உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்சிகளை நாம் பார்க்கிறோம் , அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது , அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து , ஒளிபரப்பபடுகிறது , நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி .

இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான் ,அதாவது சிக்னல்களை வெளியே அனுபிகொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான் , நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது , ஏன் என்றால் நாமிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும் .

உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் , உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே ,உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும் .


எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள் .

நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் .

இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம் .

காந்தம் இன்னும் ஈர்க்கும்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

6 comments:

Ramani said...

காந்த சக்தி குறித்து மிக அழகாக விளக்கிப் போகிறீர்கள்
படங்களுடன் விளக்கங்கள் அருமை
நான் கூட்டங்களில் பேசும் போது
இப்படி உதாரணம் சொல்வதுண்டு
நாம் உட்கர்ந்திருக்கிற இடத்திலேயே நம்மைச் சுற்றி
எல்லா ரேடியோ மற்றும் டி.வி ஒளிபரப்பு
நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது
அதை வாங்கிக் கொள்கிற சக்திவாய்ந்த ரிசீவர்
இருந்தால் ஒழிய நமக்கு அது பயன் படுவதில்லை என்று
அதைப்போல தாங்கள் சொல்லிச் செல்லுகிற
உதாரணமும் மிகச் சிறப்பாக உள்ளது
தரமான பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

karurkirukkan said...

ஐயா மிக்க நன்றி
தொடர்ந்து படித்து வாருங்கள்

Mahan.Thamesh said...

நன்றாக இருக்கிறதே . பகிர்வுக்கு நன்றிங்க

! ஸ்பார்க் கார்த்தி @ said...

சார், நல்ல இருக்கு ஆனா படங்களை இன்னும் கொஞ்சம் brighta போட்ட இன்னும் நல்ல இருக்கும்.

karurkirukkan said...

thanks sasi $ karthik

bg said...

very very super!!!
By
bala