டிஜிபியிடம் வடிவேலு மனு


தே.மு.தி.க.வினர் தொடர்ந்து தாக்கி வருவதால் தனது குடும்பத்துக்குப் பாதுகாப்பு தேவை என தமிழக டி.ஜி.பி.யிடம் நடிகர் வடிவேலு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன்.தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர்.இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது. எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன.எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,தே.மு.தி.க.வினரே முழு காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரசாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments