கலப்பட பெட்ரோல் விற்பனை

by 3:07 PM 0 comments
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் இடைப்பட்ட பகுதி நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் கூட இல்லை. இது திருச்சி, கருர் செலூம் பிரதான வழித்தடமாக உள்ளது. காங்கயம் தாண்டி வண்டி நிண்றால் 15 கிலோ மீட்டருக்கு மேல் வந்து வெள்ள கோவிலில் உள்ள பங்க்குகளில் தான் பெட்ரோல் நிரப்ப வேண்டும். இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர் பலசரக்குக்கு கடைகள். பங்க் இல்லாத இடங்களில் பலசரக்கு கடைகளில் பெட்ரோல் விற்பனை கனஜோராக நடைபெறுகின்றன்றது. நாளொன்றுக்கு சுமார் 20 பேராவது பெட்ரோல் தீர்ந்து வாகனங்களை உருட்டிச் செல்லும் நிலை உள்ளது.

அவசரத்தால் அவசியமாகிறது...

வாகன ஒட்டிகளின் அவசரம் மற்றும் அவசியத்தை உணர்ந்த பலசரக்கு மற்றும் சைக்கிள் கடைகள் போன்ற கடைகள் பங்க்கில் பெட்ரோல் வாங்கி வந்து அனுமதியின்றி விற்கின்றனர். வெள்ள கோவில் ஒலப்பாளையம் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பெரும்பாலான சைக்கிள் கடைகள், பலசரக்கு கடைகளில் கேன்களில் மொத்தமாக பெட்ரோல் வாங்கி வந்து, அதனுடன் மண்ணெண்ணெய் கலந்து மறைத்து வைத்துக் கொள்கின்றனர். பெட்ரோல் இல்லாமல் தவிக்கும் வாகன ஒட்டிகளை மடக்கி, கடைகளில் வைத்திருக்கும் கலப்பட பெட்ரோலை விற்கின்றனர். சுற்றுப் பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் இல்லாததது, குடியிருப்பு பகுதியும் அதிகம் இல்லாமல் பாதுகாப்பாக எங்கேயும் வண்டியை நிறுத்தி விட்டுச் செல்லவும் முடியாமல், நெடுஞ்சாலையில் அல்லாடும் வாகன ஒட்டிகளுக்கு இந்த கலப்பட பெட்ரோலை விற்கின்றனர். இதனால் வாகன ஒட்டிகளின் அவசரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லிட்டருக்கு 5 ரூபாய் கட்டணம் அதிகமாக விற்கின்றனர்.

நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

அதிக விலை எதிர்த்து வாகன ஒட்டிகள் கேட்டால், பெட்ரோல் பங்க் சென்று நியாயமான விலையில் போட்டுக் கொள்ளுங்கள் இங்கு தரப்படமாட்டாது என்ற பதில் கடைக்காரர்களிடம் இருந்து எதிரொலிக்கிறது. வேறுவழியின்றி அவசரத்துக்கு அதிக விலை கொடுத்து பெட்ரோலை வாங்கினாலும், கலப்பட பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்கள் விரைவில் பழுதடைகின்றன, பெட்ரோல் அடைப்பு, இன்ஜின்னும் விரைவில் பழுதடைகின்றன.

மிகவும் ஆபத்தான எரிபொருளை அனுமதியின்றி விற்பதால் அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்துக்கு உத்தரவாதம் தான். இப்படி அனுமதியின்றி பெட்ரோல் விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை விரைவில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: