தமிழக அரசு 680 கிலோ தங்கம் வாங்குகிறது-தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 16-ந் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 7 திட்டங்களை அமல்படுத்த உத்தரவிட்டு கையெழுத்திட்டார். படித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்பது அதில் ஒரு திட்டமாகும்.

"தாலிக்கு தங்கம்" என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திட்டத்தை வெற்றிகரமாக அமல் படுத்த சமூக நலத்துறை சார்பில் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தமிழ் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பெண்கள் திருமண வயதில் இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு தலா 4 கிராம் தங்க காசு வழங்குவதற்காக 680 கிலோ தங்கம் வாங்க தீர்மானித்து இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார். அ.தி.மு.க. அரசின் மிக முக்கியமான திட்டங்களில் இந்த திருமாங்கல்ய திட்டமும் ஒன்று என்றும் அவர் கூறினார்.

தாலிக்கும் தங்கம் திட்டத்தின் படி குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உதவி கிடைக்கும். இதற்காக தமிழக அரசு ரூ.148.22 கோடி செலவிடும். திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் கொடுப்பதுடன், 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவி வழங்கவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments