ஓட்டுக்கு பணம் கொடுப்பதை முடிந்த அளவு தடுத்து விட்டோம்-தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்


தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை 91 மையங்களில் நடைபெறும். சென்னையில் ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தலை முடிந்த அளவு சிறப்பாக நடத்தி உள்ளோம். பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.

ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 20 மத்திய ரிசர்வ் போலீஸ், 15 உள்ளூர் போலீஸ் என 24 மணி நேரமும், 35 போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கைக்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

எனவே பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் மூலம் முடிந்த அளவு முயற்சி செய்தோம். பிரபல நடிகர்-நடிகைகள் மூலமும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதற்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்றால் வீட்டுக்கு ஒரு போலீசாரை நிறுத்தினால் கூட முடியுமா? என்று தெரியவில்லை. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடம் முழுமையாக வந்தால்தான் தடுக்க முடியும்.

இவ்வாறு தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

No comments: