தேர்தல் பிரசார ஊர்வலத்தில் மேளம், கரகாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரை, யானைகளையும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஊர்வலம் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தி்ன் விதிமுறைகள் வருமாறு:
- ஊர்வலம் அனுமதிக்க நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்.
- ஓலிபெருக்கி பயன்படுத்த கூடாது.
- ஆம்புலன்ஸ், சவ ஊர்வலத்துக்கு இடையூறு செய்ய கூடாது.
- ஊர்வலங்களை போலீசார் வீடியோ எடுப்பதை தடுக்க கூடாது.
இரும்பு ராடில் போன்றவற்றில் கொடிகளை எடுத்து செல்ல கூடாது
- ஓரே நேரத்தில் ஓன்ருக்கும் மேற்பட்ட கட்சிகள் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் சீனியரிட்டி அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
- ஊர்வலத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர வேறு வாகனங்களில் செல்ல கூடாது.
- ஊர்வலத்தில் கொடிகள், பேனர்கள், ஆகியவற்றை மூங்கில் கழியில் வைத்து எடுத்து செல்லலாம்.
- இரும்பு ராடு போன்றவற்றில் கொடிகளை எடுத்து செல்ல கூடாது.
- மெகா போன் அனுமதி கிடையாது.
- ஊர்வலம் செல்லும்போது ஓரே இடத்தில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதோ, போக்குவரத்துக்கு இடையூறு செய்வதோ குற்றமாகும்.
- பிற கட்சிகள் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு அருகில் ஊர்வலம் செல்லும் போது அவற்றுக்கு இடையூறு செய்யாமல் செல்ல வேண்டும்.
- மாற்று கட்சி தலைவர்களின் உருவ பொம்மை, படங்கள், கேலி சித்திரங்களை எடுத்து செல்ல கூடாது.
- ஊர்வலத்தில் செல்பவர்கள் கட்சியின் சின்னம் பொரித்த தொப்பி, துண்டு போன்றவற்றை அணிந்து செல்லலாம். ஆனால் அவற்றை மொத்தமாக ஊர்வலம் தொடங்கும்போதோ, அல்லது ஊர்வலத்திலோ வினியோகிக்க கூடாது. -
ரெக்கார்டு டான்ஸ் ஆடக் கூடாது!:
- ஊர்வலத்தில் ரெக்கார்டு டான்ஸ், பார்ட்டி மேளதாளம், கரகாட்டம் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. அதே போல் குதிரை, யானை போன்ற விலங்குகளை அழைத்து வர கூடாது.
- ஆயுதங்கள், கம்பிகள், பொம்பை துப்பாக்கி போன்ற ஆபத்து மற்றும் குழப்பம் விளைவிக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் கொண்டு வர கூடாது.
- ஊர்வலங்கள் நடத்துவது முன்பு பட்டாசு வெடிப்பது, வாணவேடிக்கை செய்வது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 Comments