கோவையில் அடுத்த என்கவுண்டர் ?


கோவையில், ஏழு வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து, கற்பழித்த கட்டட மேஸ்திரி, கைது செய்யப்பட்டான். விசாரணையில், தர்மபுரி மாவட்டம், ஊத்தங்கரையில், கல்லூரி மாணவியின் முகத்தை சிதைத்து, கற்பழித்தவனும் இவனே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், ஊத்தங்கரையை பூர்வீகமாக கொண்ட கோவிந்தராஜ் - கோவிந்தம்மாள் தம்பதி, கோவை, உடையார்பாளையத்தில் தங்கி, கட்டட வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மகன், மூன்று மகள் என, இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள். மூத்த இரண்டு மகள்களுக்கு, திருமணமாகி விட்டது. மகன் வீரமுத்து (11), பள்ளியில் படிக்கிறான். கடைசியாக பிறந்த மகள் அனுசுயா (7), உடையார்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தாள்.இரு நாட்களுக்கு முன், கோவிந்தராஜின் மனைவி கோவிந்தம்மாள், மூத்த மகளின் குழந்தையை பார்க்க, ஊத்தங்கரை சென்று விட்டார். அனுசுயாவும், வீரமுத்துவும் பள்ளிக்கு சென்று விட்டனர். வேலைக்கு சென்ற கோவிந்தராஜ், மாலையில் மது பாட்டில், பன்றி இறைச்சியுடன் வீடு திரும்பினார். கூடவே, பக்கத்து வீட்டு மேஸ்திரி கோவிந்தன் (23) என்பவனும் வந்தான்.
மதுவுடன், இறைச்சியை சுவைத்த கோவிந்தன், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அனுசுயாவை அழைத்து, சிகரெட் வாங்கி வர கடைக்கு அனுப்பினான். வெகு நேரம் ஆகியும் சிறுமி வராததால், தானே கடைக்குச் சென்றான். கடை முன் நின்றிருந்த சிறுமியை அழைத்துக் கொண்டு திரும்பிய கோவிந்தன், திடீரென புதர் மண்டிக் கிடக்கும் பக்கத்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான். "இருட்டு நேரத்தில் இங்கே எதற்கு என்னை அழைத்து வந்தாய் மாமா?' என, சிறுமி அச்சத்தோடு கேட்க, திடீரென சிறுமியின் வாயை பொத்தி, கீழே தள்ளினான். மூச்சுத் திணறலில் சிறுமி மயங்க, கழுத்தை நெரித்து கொலை செய்தான். சந்தேகம் தீராத கொடூரன், தயாராக கொண்டு வந்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கினான்.இதன்பின், இறந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்திய கோவிந்தன், அடையாளம் தெரியாமல் இருக்க, சிறுமியின் முகத்தை பெட்ரோல் ஊற்றி சிதைத்தான். சிறுமியின் பிரேதத்தை புதரில் மறைத்து விட்டு, எப்போதும் போல, கோவிந்தராஜின் வீட்டுக்கு சென்று, "டிவி' பார்த்தான். சற்று நேரத்தில் ஊத்தங்கரையில் இருந்து திரும்பிய கோவிந்தம்மாள், மகள் அனுசுயாவை காணாமல் தேடினார். போதையில் இருந்த கணவன் கோவிந்தராஜு தேடியும், சிறுமி கிடைக்கவில்லை.நேற்று முன்தினம் காலை, "மகளைக் காணவில்லை' என, பீளமேடு போலீசில், கோவிந்தராஜ் புகார் கொடுத்தார். அதற்குள் கோவிந்தன், இவர்களிடம் சொல்லாமலேயே, தன் வீடு திரும்பினான்.

சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் ராமன் குழுவினர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனை அழைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனரும், பீளமேடு ஸ்டேஷன் சென்று விசாரணை மேற்கொண்டார். சிறுமியை கொலை செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததை, கோவிந்தன் ஒப்புக் கொண்டான்.

மேலும், "கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கல்லூரி மாணவி கனகலட்சுமியை கொலை செய்து, முகத்தை கல்லால் சிதைத்து கற்பழித்ததும் நான் தான்' என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தான். கைது செய்யப்பட்ட கோவிந்தனுக்கு, கவிதா(22) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளுடன், தன் பெற்றோர் வீட்டுக்கு, கவிதா சென்று விட்ட சூழலில், இச்சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற சம்பவம், வேறு எங்கேனும் நடந்துள்ளதா, அதில் கோவிந்தன் ஈடுபட்டுள்ளானா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

2 comments:

Anonymous said...

இவனைப் போன்ற மிருகங்களுக்கு என்கவுண்டர் தான் சரியான தண்டனை.

Anonymous said...

thevdiya paiyana konjam konjama saavadikanum,.kunjiya blade vechu konjam konjama narukanum.