2011-ல் இந்திய ஐடி துறையில் 2.25 லட்சம் பேருக்கு நேரடி வேலை

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டு மட்டும் 2.25 லட்சம் பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக பிரபல கன்சல்டிங் நிறுவனம் டெலாய்டி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஐடி துறை மூலம் 71.7 பில்லியன் வரை வருமானம் குவியும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது.

டெலாய்டி நிறுவனத்தின் 2011-ம் ஆண்டுக்கான மீடியா மற்றும் டெலிகம்யூனிகேஷன் கணிப்பு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் இந்தியாவில் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் எண்ணிக்கு 22.3 லட்சமாக உயரும் என்றும், 80 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 2.25 லட்சம் பேர் நேரடியாக புதிய வேலைவாய்ப்பை ஐடி துறையில் பெறும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments