இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிய வெளியுறவு அமைச்சர்


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் உரை நிகழ்த்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரையை படிக்காமல், வேறு ஒரு நாட்டின் உரையை வாசித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த அவர், "இதில் தவறு ஒன்றும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமும் அல்ல' என்று கூறினார். ஆனால், இந்த இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்பில், "பாதுகாப்பு மற்றும் மேம்பாடு' குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரையை வாசிப்பதற்குப் பதிலாக, போர்ச்சுக்கல் அமைச்சரின் உரையை வாசிக்கத் துவங்கினார். இதனால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி, அமைச்சரிடம் தவறைச் சுட்டிக் காட்டினார். தவறை உணர்ந்த கிருஷ்ணாவும், பின்னர் தனது உரையை வாசித்தார். மூன்று நிமிடங்கள் மட்டுமே இந்தக் குழப்பம் நீடித்தது.

இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த கிருஷ்ணா, "உரையை மாற்றி வாசித்ததில், தவறு ஒன்றும் இல்லை; அது பெரிய விஷயமும் அல்ல. என் முன்னால் நிறைய பேப்பர் கிடந்ததால், இந்த தவறு நிகழ்ந்து விட்டது. இதுபோன்ற உரைகள், முதல் பத்தியில் பொதுவான விஷயத்தையே கொண்டிருக்கும். அந்தப் பத்தி, பாதுகாப்புக் கவுன்சில் தலைமைப் பொறுப்பேற்ற நாட்டுக்கு வாழ்த்து கூறுவதாக அமைந்திருக்கும்' என்றார்.

Post a Comment

1 Comments