மொபைல்நம்பர் போர்டபிலிட்டி வசதி மூலம் அதிகம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனங்கள்


மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சில சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹரியானாவில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை‌‌ பெரும்வரவேற்பைப் பெற்றது. இதன்பின், நாடு முழுமைக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொலைதொடர்பு கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மொபைல்நம்பர் போர்டபிலிட்டி வசதி மூலம் அதிகம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனமாக ஐடியா நிறுவனம் உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐடியா நிறுவனத்தில் 35 ஆயிரம் பேரும், வோடபோன் நெட்வொர்க்கில் 30 ஆயிரம், ஏர்செல் நெட்வொர்க்கில் 12 ஆயிரம் பேரும், ஏர்டெல் நெட்வொர்க்கில் 8 ஆயிரம் பேரும் புதிதாக இணைந்துள்ளனர்.

No comments: