27 பேருக்கு எய்ட்ஸ் பரப்பிய இளம் பெண்-ஆண்களை பலி வாங்கிய இளம் பெண்

கணவன் மூலம் தனக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியதால் ஆண் வர்க்கம் மீதே ஆத்திரம் அடைந்த இளம்பெண், ஆண்களை பழிவாங்கும் விதமாக 27 பேருக்கு எய்ட்ஸ் கிருமியை பரப்பியுள்ளார். மத்திய மும்பையை சேர்ந்த பெண் கிரிஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 29. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரும், எல்லா பெண்களையும் போல் தனக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென விரும்பினார்.

ஆனால், அவருக்கு கணவராக வாய்ந்தவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி. இந்த உண்மை தெரியாமல், பெற்றோர் பார்த்த அந்த மாப்பிள்ளைக்கு கிரிஜா கழுத்தை நீட்டினார். திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பிறகே கணவனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தில் மருத்துவ பரிசோதனை செய்த போது, கிரிஜாவுக்கும் எச்.ஐ.வி. பாதித்துள்ளது உறுதியானது.

‘என் வாழ்க்கையை இப்படி நாசமாக்கி விட்டாயே’ என்று கணவனிடம் சண்டை போட, அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். கணவனால் தனது வாழ்க்கையே பாழாகி விட்டதால் ஆண் வர்க்கம் மீதே கடும் கோபம் கொண்டார் கிரிஜா. ஆண்களை பழி வாங்க தீர்மானித்து, பணக்கார வீடுகளில் கிரிஜா வீட்டு வேலைக்கு சேர்ந்தார். அழகான அவர், அந்த வீட்டு ஆண்களை எளிதாக தனது வலையில் வீழ்த்தினார். அதன் மூலம், அவர்களுக்கு எய்ட்ஸ் கிருமியை பரப்பினார்.

தென் மும்பையை சேர்ந்த ஒரு பணக்காரர் வீட்டில் வேலை செய்தபோது, அந்த வீட்டு இளைஞரை வீழ்த்தினார். அந்த வாலிபருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படவே, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிந்தது. அதன் பிறகே, கிரிஜாவின் பழிவாங்கும் படலம் பற்றிய விவரம் அம்பலமானது.

பாதிக்கப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, கிரிஜா பிடிபட்டார். அவரை வெளியே விட்டால் பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்வார் என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் தனியறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 27 பேருக்கு எய்ட்ஸ் பரப்பி இருப்பதாக போலீஸ் விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

No comments: