ரூ. 12 ஆயிரம் கோடிக்கு விற்பனை காதல் தின பரிசுப் பொருட்கள் இந்தியாவில் மட்டும் !உலகம் முழுவதும் காதலர் தினவிழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் காதலர் தின விழா கொண்டாட்டம் அதிகரித்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமான பரிசுப் பொருள்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

காதலை வெளிப்படுத்தும் 5 ரூபாய் சிவப்பு ரோஜாவில் இருந்து, பல லட்சம் ரூபாய் வரை பரிசுப் பொருள்களை மனதுக்கு பிடித்தவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். இதை கருத்தில் கொண்டு ஏராளமான பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

கடந்த சில தினங்களாக காதல் பரிசுப் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. ரோஜா பூக்கள் விற்பனை நேற்றும் இன்றும் அமோகமாக இருந்தது. இந்தியாவில் காதலர்தின பரிசுப் பொருட்கள் விற்பனை, எந்த அளவுக்கு உள்ளது என்று 10 முக்கிய நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் கடந்த ஒரு வாரத்தில் காதல் பரிசுப்பொருட்கள் விற்பனை மிக, மிக உச்சத்தில் இருந்தது தெரிய வந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காதல் பரிசுப் பொருட்கள் விற்பனை 120 சதவீதம் அதிகமாக இருந்ததாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் பொதுச் செயலாளர் டி.எஸ். ரவத் கூறினார்.

தொழில் நிறுவனத்தின் கணக்கெடுப்புப்படி இந்தியா முழுவதும் காதலர் பரிசுப் பொருட்கள், பூக்கள், சாக்லேட்டுகள், பொம்மைகள், தங்க, வைர நகைகள், ரெடிமேடு உடைகள், செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

காதலர்கள் இ-மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டாலும் வாழ்த்து அட்டைகளை வாங்கிக் கொடுத்து கவரவும் தவறுவது இல்லை. இதற்காக இந்த ஆண்டு அதிநவீன வடிவமைப்புகளுடன் 171 வகைகளில் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாழ்த்து அட்டைகள் 50 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விலையில் விற்பனை செய்யப்பட்டன. ஆர்சிஸ் என்ற நிறுவனம் காதலர்களை கவரும் வகையில் 220 வகை பரிசுப் பொருட்களை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய காதலர்கள் மட்டுமின்றி ஏற்கனவே காதலித்து, திருமண வாழ்வில் இணைந்த ஜோடிகளும் இந்த ஆண்டு அதிக அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கி சென்றதை காணமுடிந்தது. இது குறித்து தி.நகரில் உள்ள பரிசுப் பொருள் கடைக்காரர் ஒருவர் கூறுகையில்,

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஜோடியாக வந்து பரிசு பொருட்கள் வாங்கி சென்றனர். அப்படி வந்தவர்கள் போட்டோ பிரேம்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள், கிரிஸ்டல்கள், இதய வடிவ பொம்மைகள் போன்றவைகளை வாங்கிச் சென்றனர் என்றார்.

பெங்களூரைச் சேர்ந்த பி.பி.ஓ. ஊழியர் அதுல் பர்கவ் தனது காதலிக்கு பல்வேறு வண்ணங்களில் 365 ரோஜா பூக்கள் வாங்கிக் கொடுத்தார். சராசரியாக ஒவ்வொரு காதல் ஜோடியும் பரிசுப் பொருட்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்ததாக தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினவிழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் காதலர் தின விழா கொண்டாட்டம் அதிகரித்துள்ளது.

2 comments:

sakthistudycentre-கருன் said...

வடை வாங்க வந்துட்டோம்ல ....

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..

sakthistudycentre-கருன் said...

அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்குபா..