இதுதான் அரசு பள்ளிகூடமா ?


இரண்டு நாட்களுக்கு முன்பு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த பொழுது என் அருகில் ஒரு சிறுவன் , நான் பேச ஆரம்பித்தேன் , தம்பி என்ன படிக்கற ? , என்று அவனிடம் விசாரிக்க ஆரம்பித்ததில் அவன் சொன்னான் நான் ஒன்பதாம் வகுப்பு பாதியில் நின்று விட்டேன் என்றும் அதற்கு காரணம் கேட்டால் , உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவன் லீவு போட்டான் ,கால் ஆண்டு பரிட்சைக்கு , அதனால் அந்த பள்ளியில் அவனை அதற்கு பிறகு படிக்க அனுமதிக்க வில்லை , வேண்டும் என்றால் அடுத்த வருடம் படிக்கலாம் என்றும் சொன்னதாக சொன்னான் , எனக்கு அதிர்ச்சி ஏன் என்றால் பரிட்சைக்கு வராமல் போனதற்காக ஒரு மாணவனை இப்படியா தண்டிப்பது , அதுவும் அவன் சரியான காரணத்திற்கு தான் லீவு எடுத்திருக்கிறான் , தனியார் பள்ளிகள் தான் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்றால் ,இவன் படிப்பது அரசாங்க பள்ளியில் , இங்கு தான் வசதி இல்லாத மாணவர்கள் வந்து படிப்பார்கள் , அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை இவர்கள் அல்லவா புரியவைத்து கல்வி கற்று தர வண்டும் , ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் ?

நம்முடைய சமுதாயம் சரியான முறையில் வளருவதற்கு அனைவர்க்கும் கல்வி அவசியம் அல்லவா ?

Post a Comment

3 Comments

அந்த மா ணவன் பற்றி அந்த பள்ளியிலும் கேட்கவேண்டும். அவன் என்ன தவறு செய்தானோ?
அப்படியில்லையேன்றால் இது கண்டிக்கதக்கதே..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_31.html
calmmen said…
அந்த மாணவன் கண்டிப்பாக பொய் சொல்லவில்லை , பள்ளி நிர்வாகம் அவ்வாறு நடந்து கொள்கிறது !?