ஒரு டீ விலை ரூ.4,557


உலகிலேயே உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.இந்த உயரமான உணவகத்தின் பெயர் அட்மாஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இந்த உணவகத்திற்கென பிரத்யேக லிப்ட் உள்ளது. இங்கு சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம். இங்கிருந்து அமீரகத்தின் வானவிளிம்பைக் காணலாம். இந்த சொகுசு உணவகத்தில் பிரைவேட் டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரத்து 62. 65 கொடுக்க வேண்டும். மேலும், மதிய வேளையில் டீ குடிக்க ரூ. 4 ஆயிரத்து 557. 75 பைசா கொடுக்க வேண்டும். இது தவிர பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனி வேண்டுவோர் தலைக்கு ரூ. 2 ஆயிரத்து 481.69 பைசா கொடுத்தால் போதும்.

No comments: