பிரதமர் -போக்குவரத்து பாதிப்பு -மாரடைப்பு நோயாளி பலி

டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் செல்லும் பாதைகளில் போக்கு வரத்தை முற்றிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் ராஜ்காட் பகுதியில் சென்றார். அப்போது அங்கு போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். அந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த அனில் ஜெயின் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்தி இருந்ததால் அனில்ஜெயின் சென்ற கார் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அரை மணி நேரமாக கார் அங்கேயே நின்றிருந்தது. அனில் ஜெயின் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

பிரதமர் சென்ற பிறகு கார் ஆஸ்பத்திரிக்கு சென்றது. சில நிமிடங்களில் அவர் உயிர் இழந்து விட்டார்.அனில்ஜெயினை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடியாததால்
காப்பாற்ற முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


இந்தியாவில் இந்த நிலை மாறுமா ?


*********


HERO of the DAY

No comments: