மனைவியை துண்டுதுண்டாக வெ‌ட்டி

கொடூர கொலை என பல செய்திகள் படித்திருப்போம். அப்படிப்பட்ட கொடூர கொலை தான் இது. டேராடூனில் பணியாற்றி வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது மனைவி கொன்று , சடலத்தை துண்டு துண்டுகளாக வெ‌ட்டி, அதை 2 மாதங்களாக ஐஸ் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். ராஜேஷ் குலாட்டி (37). இவரது மனைவி அனுபமா லாட்டி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். ராஜேஷ் அவரது மனைவியை அடிப்பதை‌யும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இது தொடர்பாக ராஜேஷ் மீது போலீசில் புகாரும் செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் திடீரென அனுபமாவை காணவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் கேட்க சரியான தகவல்களை தர மறுத்தார் ராஜேஷ். இரண்டு மாதங்கள் கழிந்தன. ராஜேஷ் மீது சந்தேகம் வலுக்கவே அனுபமாவின் சகோதரர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரித்தனர். உறைய வைக்கும் உண்மையை உரைத்தார் ராஜேஷ். சம்பவத்தன்று அனுபமாவுடன் சண்டையிட்டதாகவும் , அவரை தலையில் அடித்ததால் அனுபமா பலத்த காயத்துடன் மயங்கியதாகவும் கூறினார். அதன் பின் தான் அந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அனுபமாவின் உடலை கூறு போட்டுள்ளார் ராஜேஷ். ஐஸ்க்ரீம்களை வைக்கும் பிரத்‌யேக ப்ரீசர் பாக்ஸ் ஒன்றை வாங்கியுள்ளார். துணடு, துண்டுகளாக வெட்டிய உடலை ப்ரீசரில் அடுக்கி வைத்துள்ளார். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக அப்புறப்படுத்தி வந்துள்ளார். அக்கம், பக்கத்தாருக்கு சந்தேகம் சிறிதளவும் வராமல் மிகவும் சகஜமாக இருந்து வந்துள்ளார் ராஜேஷ். ராஜேசை தற்போது போலீசார் காவலில் எடு்த்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

No comments: