விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது. அமெரிக்காவின் குட்டு உடைபட்டதால் ஏக குஷியில் இருக்கும் ரஷ்யாவில் அசேஞ்சுக்கு ஆதரவு கோஷங்கள் தான். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் முன்வைக்க வேண்டும் என அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலகத்தில் இருந்தே சிபாரிசுகள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#####

லஞ்சம் வாங்குவது குறித்த படம்

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்த படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணையதளத்தின் வழியாக மக்கள் தெரிவிக்க வகை செய்ய, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், "விக் ஐ' என்ற பெயரில் வெப்சைட்டை துவக்கியுள்ளது.லஞ்ச ஒழிப்பு தினத்தையொட்டி, டில்லி விஞ்ஞான் பவனில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பி.ஜே.தாமஸ் கலந்து கொண்டார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த படங்கள் மற்றும் பேச்சுக்களை இணைய தளத்தில், "அப்லோட்' செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில், "விக் ஐ' என்ற பெயரில் புதிய வெட் சைட் துவக்கப்பட்டது. http://www.cvc.nic.in என்ற முகவரி மூலம் "விக் ஐ' (விஜிலென்ஸ் ஐ என்பதின் சுருக்கம் ) வெப்சைட்டின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம். டில்லி விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் இந்த வெப்சைட்டை துவக்கி வைத்தார். மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் தாமஸ் குறிப்பிடுகையில், "லஞ்ச ஊழலை தடுக்க விஜிலென்ஸ் கமிஷன் நவீன முறைகளை வகுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, "விக் ஐ' வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

1 comment:

Venkat Saran. said...

ரஷ்யாவிற்கு என்னா ஒரு வில்லத்தனம் ?