தகவல் உரிமைச் சட்டத்துக்கு நிதி குறைப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.77 லட்சத்தை மட்டுமே அரசு செலவு செய்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எஸ்.சி அகர்வால் என்பவர் செய்திருந்த மனுவுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.5 கோடி செலவிடப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பி்ல் அளிக்கப்பட்ட தகவலில் 2008-09-ம் ஆண்டில் ரூ.1.19 கோடி செலவிடப்பட்டது, கடந்த நிதியாண்டில் 4.91 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.77 லட்சம் மட்டும் செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும், பெரும்பான்மையான மக்களுக்கு இந்தச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்ற பலமான கருத்தும் நிலவுகிறது.

source.dinamalar

No comments: