கேரளாவில் விஜய்க்கு சிலை


நடிகர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டுவது, சிலை வைப்பது புதிதல்ல என்றாலும், அதில் ஒரு புதிய அம்சத்தை புகுத்தியிருக்கிறார்கள் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள். விஜய்க்கு சிலை வைத்திருக்கும் இவர்கள் அந்த சிலைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த சிலை தனது கை, கால்களை அசைக்குதாம்.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. ரசிகர் மன்றங்களும் இருக்கின்றன. விஜயின் புது பட ரிலிஸின்போது அங்குள்ள ரசிகர்களும் பாலபிஷேகம், கட்அவுட் என அசத்துவார்கள். அப்படி அசத்திய ரசிகர்கள் இப்போது விஜய்க்கு சிலை வைத்து அசத்தியிருக்கிறார்கள்.

தற்போது காவலன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் கேரளாவிலுள்ள சொர்ணுர் விஜய் ரசிகர்கள் விஜயின் உருவ சிலையை வைத்திருக்கிறார்கள். இந்த சிலையின் சிறப்பு என்னவென்றால் கைகள், கால்கள், கண்கள் அனைத்தும் அசையுமாமம். அதுமட்டும் இல்லாமல் விஜயின் படப்பாடலுக்கு ஆடவும் செய்யுமாம். இப்படி பட்ட சிலையை பார்த்து விஜயும் மனதில் ஒரு சந்தோஷ ஆட்டத்தை போட்டுவிட்டாராம்.

இனி விஜயை கூட ரோபோ என்று சொல்லலாம் போலிருக்கிறது.

COURTESY.tamil.chennaionline

No comments: