பண்புக்கு கிடைத்த பரிசு 17 மில்லியன் டாலர்கள்


மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது.
அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார்.
லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார்.அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால்இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது.பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.அவர் அமெரிக்காவில் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பிலிப்பைன்சில் தனது குடும்பத்தினரை சந்திக்க விடுமுறையில் வந்திருந்தபோது இது நடந்துள்ளது

No comments: