உலகில் அதிக சம்பளம் பெறும் சிஇஓக்கள்பட்டியல்

அதிக சம்பளம் வாங்கும் அமெரிக்க சிஇஓக்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி, சிட்டி கார்ப்பின் விக்ரம் பண்டிட் மற்றும் மோட்டரோலாவின் சஞ்சய் குமார்.

அமெரிக்க நிறுவன சிஇஓக்களில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி 67வது இடம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு சம்பளம்: 13.97 மில்லியன் டாலர்கள்.

மோட்டரோலா சிஇஓ சஞ்சய் குமார் ஜா 3.45 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 377 வது இடத்தில் உள்ளார்.

சிட்டி குழுமத் தலைவர் [^] மற்றும் சிஇஓ விக்ரம் பண்டிட் 1.25 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 450வது இடம் வகிக்கிறார். இவர்கள் மூவரும் இந்தியர்கள் [^] என்பது குறிப்பிடத்தக்கது.முதலிடத்தில் இருப்பவர் லிபர்டி மீடியா கார்ப்பின் சிஇஓ கிரிகோரி மாபே. இவர் வாங்கும் சம்பளண் ஆண்டுக்கு 87.1 மில்லியன் டாலர்.
இவருக்கு அடுத்து இருப்பவர் ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எல்லிசன். சம்பளம்: 61.9 மில்லியன் டாலர்.
மூன்றாமிடத்தில் 52.2 மில்லியன் டாலர் சம்பளத்துடன் ஆக்ஸிடென்டல் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் சிஇஓ ரே இராணி உள்ளார்


No comments: