இ-மெயில் இனியும் தேவையா? - கூகிளும் ஃபேஸ் புக்கும் குடுமிப்பிடி சண்டை

இ-மெயில் எதிர்காலத்தில் இருக்குமா? - கூகிளுக்கும் ஃபேஸ் புக்கிற்கும் குடுமிப்பிடி சண்டை.தற்போது எப்படி கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டதோ அதே போல் இ-மெயில் எதிர்காலத்தில் குறைந்து விடும் எனக் கூறியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க் (Mark Zuckerberg). அனைத்து இ-மெயில்களையும் உள்ளடக்கிய தகவல் அனுப்பும் வசதி ஒன்றினை பேஸ்புக் புதிதாக உருவாக்கியுள்ளது.கூகுளின் ஜிமெயில் வசதியை அழிப்பதற்காகவே பேஸ்புக் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பரவலாக அனைவராலும் பேசப்படுவதால் பேஸ்புக்கின் இந்த புதிய வசதிக்கு கூகிள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது பேஸ்புக்கை 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களுக்கு உதவும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இனி இ-மெயில், குறுந்தகவல், பேஸ்புக் தகவல் எதுவாக வேண்டுமானாலும் பேஸ்புக்கை பயன்படுத்தி அனுப்பிக் கொள்ள முடியும். மிகவும் முக்கியமான விடயம் இதில் ஸ்பாம் மெயில்களும் வடிகட்டப்பட்டு விடும். அனைத்தும் ஒரே இடத்தில் அவரவர் வசதிக்கேற்றவாறு கிடைப்பதால் இது இ-மெயில் அழிப்பான் என்றே கூறப்படுகிறது.
பல இ-மெயில்களையும் பயன்படுத்துவோர் இனி பேஸ்புக்கில் வந்தது குவிந்து விடுவார்கள் என கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று விட்டால் தரமான இ-மெயில் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் குறைந்து விடுவர்.
காலங்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இ-மெயில் வசதி இல்லாமல் போய் விடும் என்ற ஆதங்கத்தில் ஜிமெயில் தங்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் , ஜிமெயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவை உருவாக்கப்படவில்லை என புதிய விரைவுத் தகவல் அனுப்பும் வசதியை தொடக்கி வைத்துப் பேசிய 26 வயதாகும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க் (Mark Zuckerberg) கூறினார்.

source.tamilcnn

*****************************************************************************

கமல்ஹாசனின் "மன்மதன் அம்பு" ட்ரெய்லர்


No comments: