வேலைவாய்ப்பு அலுவலங்களில் ஆன்லைன் பதிவு முறை: இன்று முதல் துவக்கம்

by 2:01 PM 0 comments
பொது மக்களுக்கு ஒரு நற் செய்தி , இனி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மணி கணக்காக நிற்க வேண்டியது இல்லை , வீட்டில் இருந்த படியே பதிவு செய்யலாம்


தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர். இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார். இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in
1 நேர்முனையில் பதிவு செய்வது எப்படி ?

தோன்றும் படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் துல்லியமெனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

நேர்முனை கூடுதல் தகுதிகள் பகுதியை கொடுக்கவும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3 நேர்முனையில் புதுபிக்க இயலுமா?

ஆம். நேர்முனையில் புதுபிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுபிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பித்தல் விண்ணப்பிக்கலாம்.

4 எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா?

தங்களது தற்காலிகப் பதிவு எண்ணை பயன்படுத்துவோர் அடையாளமாகவும், பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5 நேர்முனையில் முகவரி மாற்ற முடியுமா?

ஆம். வேட்பர்கள் தாங்களே முகவரி மாற்றலாம்.

6 நேர்முனை முன்னுரிமைச் சான்று பதிய இயலுமா?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் அவ்வாறு பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7 எந்த வகை வேலை வாய்ப்புகளை நான் எதிர் பார்க்கலாம்?

அனைத்து மாநில அரசு/மாநில அரசுச் சார்ந்த/மைய அரசு மைய அரசுச் சார்ந்த உள்ளாட்சி மற்றும் அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள் தங்கள் தேவைகளை பதிவுமுப்புப்படி பரிந்துரைக்குமாறுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பிக்கொள்ளலாம். மைய அரசு நிறுவனங்கள் வெளிச்சந்தைகளிலும் ஆள் சேர்க்கின்றன.

8 பணிவிடுவிப்பான ஒரு நாள் எவ்வாறு பதிவு செய்வது?

வேலைவாய்ப்பகம் மூலம் பணிகிடைத்து ஒரு பணிக்காலியிடம் இல்லாததால் விடுவிப்பு ஆகிய தேதியிலுருந்து 90 நாட்களுக்குள் மீள்பதிவு செய்து பதிவுமூப்புபைப் பெற்று கொள்ளலாம்.

9 நான் ஒரு முதுநிலை பட்டதாரி. நான் பதிவு விண்ணப்பத்தை அளிக்க வேண்டியது சென்னையிலா? மதுரையிலா?

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தினர் சென்னையிலும், இதர மாவட்டத்தினர் மதுரையிலும் பதியலாம்.

10 எந்த நேரத்தில் எத்தனை தகுதியினை நான் பதியலாம்?

எத்தனைக் கல்வித் தகுதிகள் வேண்டுமானாலும் பதியலாம். பின்னர் கூடுதல் தகுதிகள் ஏதும் பெற்றால் இணையதள நேர்முனையில் பதியலாம்.

11 பதிவில் எதாவது குறைபாடு இருந்தால் எவ்வாறு சரி செய்வது?

அவ்வாறு சரி செய்ய அனைத்துச் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் காணவும்.

12 இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

13 இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.


courtesy. dinamalar, tnvelaivaaippu.gov.in

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: