மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பதிவு: புதுப்பிக்க தேவையில்லை

மாற்றுத்திறனாளிகள் இனி தங்களின் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தேலையில்லை என்ற அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மாற்று திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறார். ஏற்கனவே மாற்று திறனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஒரு முறை பதிவு செய்தால் போதும். மீண்டும் அப்பதிவை புதுப்பிக்க தேவையில்லை என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் உடல் நிலை மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளும் இனி வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டியது இல்லை என்ற உத்தரவை அரசு பிறப்பித்து, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

courtesy.dinamalar

Post a Comment

1 Comments

1.ஒவ்வொரு மாநில அரசும் மாற்றுத்திறனாளிகள் செய்வதற்குரிய வேலைகளைக் கண்டறிந்து வேலைவாய்ப்பகத்தில் ஒதுக்க வேண்டும்.
இதை இந்த அரசு 2005 இல் ஒதுக்கிய 117 இடங்களுக்குப் பிறகு மேலும் ஒதுக்கீடு செய்யவில்லை.
ஆனால் இதே ஒதுக்கீட்டை மத்திய/ஹரியானா அரசுகள் 1000 க்கு மேற்பட்ட இடங்களைக் க்ண்டறிந்து ஒதுக்கியுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் இன்னும் ஒதுக்கப்பட்டவர்களாகவே தமிழகத்தில் உள்ளனர் என்பது கசப்பான உண்மை.