திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகள்நடிகை நயன்தாராவும்- பிரபுதேவாவும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக ஊர் சுற்றி வந்ததும், ஓ‌ட்டல்களில் ஒன்றாக தங்கியதும் ஊரறிந்த ரகசியம். ஆனாலும் எங்களுக்குள் காதல் இல்லை. ஒரு இயக்குனர் - நடிகை என்ற அளவில்தான் எங்கள் உறவு இருக்கிறது என்று பேட்டி கொடுத்து வந்த பிரபுதேவா, சமீபத்தில்தான் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் அந்த ஜோடிக்கு சிறந்த தம்பதிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் விவகாரம் பெண்கள் அமைப்பு மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நயன்தாரா - பிரபுதேவா இடையிலான உறவு காதலா? கள்ளக்காதலா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் இந்த விவகாரத்தின் சூடு குறையும் முன்னே... இந்த ஜோடியை சிறந்த தம்பதிகள் (?) என தேர்ந்தெடுத்து விருதையும் கொடுத்து கவுரவித்திருக்கிறது ஒரு சினிமா பத்திரிகை.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்பட கலைஞர்களுக்கான இந்த விருதில், தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜூம், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே வரிசையில் சிறந்த தம்பதிகளுக்கான பெஸ்ட் கப்புள் அவார்‌ட் பிரபு‌தேவா - நயன்தாரா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. நயனும், பிரபுதேவாவும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இப்படியொரு விருதுக்கு அவர்கள் தேர்ந்‌தெடுக்கப்பட்டிருந்தனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் இந்த விரு‌தினை பிரபுதேவாவும், நயன்தாராவும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டனர். என்னத்த சொல்ல?!

இந்த விவகாரத்தில் திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி என்று அந்த பத்திரிகை விருது கொடுத்திருப்பது குற்றமா? அல்லது திருமணம் என்ற ஒரு உன்னதமான பந்தத்தை உதறித் தள்ளிவிட்டு நயன்தாராவோடு ஜோடி போட்டு புன்னகை பூரிப்புடன் சென்று விருதை பெற்றுக் கொண்டிருக்கும் பிரபுதேவா குற்றவாளியா? அல்லது பிரபுதேவா திருமணம் ஆனவர்... அவரை நம்பி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என தெரிந்தே... அவருடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருக்கும் நயன்தாரா குற்றவாளியா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது யார்? உண்மையிலேயே அவர்கள் சிறந்த ஜோடிகள் என்றால்... இதுநாள்வரையிலும் நாங்கள் நட்புடனேயே பழகுகிறோம், எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை... ஒரு இயக்குனர்- நடிகை என்ற அளவில்தான் எங்ளது உறவு இருக்கிறது என்றெல்லாம் பேட்டி கொடுத்தது எதனால்?


courtesy.dinamalar

No comments: