ஒசாமா பின்லேடன் பற்றிய புதிய திடுக்கிடும் தகவல்கள் : ஐரோப்பிய உளவுத்துறை - அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குலின் முக்கிய குற்றவாளியும், அல் கொய்தா மற்றும் பல்வேறு பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்பின் தலைவைனுமான ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டோம் என்று ஐரோப்பிய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இத்தகவல்கள் வெளியாயின. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவரின் பெயர் பாதுகாப்பு கருதி குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பேட்டியில் அவர் கூறியதாவது : இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்த பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான சிலர் தந்த தகவல்களின் அடிப்படையில் ஐரோப்பிய உளவுத்துறை பின்லேடனை மிக அருகில் நெருங்கியதாகவும், ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னரே பின்லேடன் தப்பிச் சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரையில் மர்மமாகவே உள்ள பின்லேடன் தற்போது, அன்றாட செயலாக்கப் பணிகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, ஆலோசனைகள் வழங்குவதிலேயே, அதிக ஈடுபாடு காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வதிர்ச்சித் தகவல்கள் சர்வதேச பயங்கரவாதச் சதிச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புக்களிடையே அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
source:adhikaalai.com
0 Comments