தமிழ்நாட்டில் சர்ச்சையில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை தமிழக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாசங்கர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உமாசங்கர் மீதான விசாரணையை தொடரலாம், ஆனால் விசாரணையின் இறுதிமுடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.அதேநேரம், தான் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திலும் உமாசங்கர் முறையீடு செய்தார்.இந்த நிலையில், உமாசங்கர் மீதான நடவடிக்கைகளை அரசு ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்ட உத்தரவில், உமாசங்கர் மீதானவிசாரணை தொடங்கப்பட்டுவிட்டதால், அவரது இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், விசாரணையின் முடிவைப் பொறுத்து இடைநீக்க காலம் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
courtesy.bbc
0 Comments