சலூனில் செல்பேசியால் ஏற்பட்ட சங்கடம்

இரண்டு நாள் முன்பு ஷேவிங் செய்யலாம் என்று சலூன் கடைக்கு போயிருந்தேன் , அங்கே இருந்த கடைக்காரர் நான் போனதும் என்னமோ பேசினார் , ஆனால் என்ன பேசினார் என்று தெரியவில்லை , நானும் அவரை பார்த்து சிறிது விட்டு , பேப்பர் படித்து கொண்டு இருந்தேன் ,அடுத்து நான் போக வேண்டிய நேரம் வந்ததும் , நான் சென்று நாற்காலியில் உட்கார்ந்தேன் , சிறிது நேரத்தில் அவருக்கு செல் பேசியில் இருந்து அழைப்பு வந்தது , உடனே அவர் தன்னுடைய ஹான்ட்ஸ் ப்ரீ மூலம் தன்னுடைய நண்பியிடம் பேச ஆரம்பித்து விட்டார் , அவர் பாட்டுக்கு கொஞ்சி பேசுகிறார் , என்னுடைய நிலையை பாருங்கள் , எனக்கு ஷேவிங் செய்து கொண்டே அவ்வளவும் செய்கிறார் அவர் கோபப்பட்டு பேசுகிறார் , அப்போது கொஞ்சம் என் கழுத்தில் உள்ள கத்தி கொஞ்சம் ஆழமாகவோ அல்லது , தடம் மாறினாலோ என்னுடைய நிலை என்ன ?, எனக்கு பயங்கர கோபம் வேறு , என்னால் வெளி காட்டி கொள்ள முடியவில்லை , கடைசியில் என்னுடைய முகத்தை பார்த்தால் , கிருதா சரியாய் வைக்கவே இல்லை , பிறகு கஷ்டப்பட்டு அவர் சரி செய்தார் . அதுவும் அவர் செல் பேசி பேசிகொண்டே செய்தார் , கடைசியில் நான் என்னை நொந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்தேன்/

முக்கியமான தகவல் என்றால் பேசிவிட்டு , வேலையே செய்யலாம் , அதை விட்டு விட்டு , பேசிகொண்டே வேலையே செய்வது முக்கியமாக சலூன் போன்ற இடங்களில் மிகவும் ஆபத்தான ஒன்று .

செய்யிற வேலையில் கவனம் இல்லை யன்றால் வாழ்கையில் மேலே வர முடியும் என்று நினைக்கிறீர்கள் ?

karurkirukkan.blogspot.com

இந்த படைப்பை 04.09.10 தினமணியில் வெளியிட்டு ஊக்கபடுதியதற்கு மிக்க நன்றி , தினமணிக்கு.தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டு இருக்கும் தினமணிக்கு மனமார்ந்த நன்றிகள்

Post a Comment

3 Comments

Venkat Saran. said…
வணக்கம் நண்பரே , பல பதிவர்களின் பதிவுகளை படித்த நான் எப்படி உங்களை விட்டுவிட்டேன் ? நானும் கரூர்தான் தங்கள் வலைதளத்தை கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி . இது என்னோடைய ப்ளாக் முடிந்தால் வாருங்கள் venkatsaranblog.blogspot.com.
calmmen said…
வாங்க வெங்கடேஷ் போன வாரம் தான் கரூரில் யாராவது பதிவர்கள் இருகிறார்களா என்று இணையத்தில் நீண்ட நேரம் தேடினேன் , ஆனால் யாரும் சரியாக படவில்லை , நல்ல வேலை நீங்கள் என்னை கண்டுபிடித்து விட்டீர்கள் ,மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு நண்பியிடம் இருந்து போன் வரவில்லை என்பதற்காக அவரைத் திட்டுவதா?
பாவம் சார்.. அவர் விடுங்க.. அனுபவிக்கட்டும்.
நீங்கள் உயிருடன் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடையுங்கள்..