சாராயம் குடிப்பதில் அமெரிக்கர்களுக்கு இணையாககேரளவாசிகள் சாதனை

உலகில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் கேரளா மாநிலம் அமெரிக்கவுக்கு இணையான தகுதி பெற்றுள்ளதாக புள்ளி விவரத்துடன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒ. இ.சி.டி. எனும் சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் உலகிலேயே மது அருந்துபவர்களின் நாடுகளில் லக்ஸம்பர்க் நாடுதான் முதலிடம் பெற்றுள்ளது. இந்த நாட்டில் ஆண்டிற்கு ஒரு நபர் 15.5லிட்டர் மது அருந்துகிறார். இதில் அமெரிக்கா 20 -வது இடத்தில் உள்ளது. இவர்களுக்கு இணையாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 68.32 லட்சம் சாராய வகைகளுக்கும், 26.92 லட்சம் பீர் வகைகளுக்கும் செலவு செய்யப்பட்டு ரூ.2019.38 கோடியும் ஈட்டியுள்ளன. கேரளாவில் இந்தாண்டு 2010 ஏப்ரலில் தொடங்கி ஜூலை வரை அரசு சாராய விற்பனை மூலம் ரூ6500 கோடி வரியாக கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ 5040 கோடி வருõய்தான் கிடைத்துள்ளது. மாநில மொத்த மக்கள் தொகையில் ஒருவர் ஆண்டிற்கு ரூ. 1340 -க்கு மது குடிப்பதற்கு செலவிடுகிறார்.

நன்றி : தினமலர்

Post a Comment

0 Comments