பிளாஸ்டிக் பத்து ரூபாய் நோட்டு

பத்து ரூபாய் காகித நோட்டுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கால் ஆன ரூபாயை புழக்கத்தில் விட்டு பொதுமக்களின் கருத்துக்களை அறிய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பத்து ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் தற்போது காகிதத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இந்நோட்டுக்கள் விரைவில் அழுக்காகி, நைந்து கிழிந்து விடுகின்றன. எனவே, பிளாஸ்டிக்கால் ஆன பத்து ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட, ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. நடப்பாண்டிலேயே இதை சோதித்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிழிந்தது உட்பட பலவகை குறைபாடுகளுடன் கூடிய 13 ஆயிரத்து 72 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதிவிரைவில் சேதமடையக் கூடியவைகளாக இருப்பவை, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் தான். பத்து ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி அதற்கு பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொறுத்து, பிற இலக்கங்களிலும் அவ்வகை நோட்டுக்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசிக்கும். தற்போது சில வெளிநாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.
courtesy.dinamalar
karurkirukkan.blogspot.com

No comments: