கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிக்க சலுகை அறிவிப்பு

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்காமல் தவறியவர்களுக்கு, மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 2006, 07 மற்றும் 2008 ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்தல் சலுகையும், 2009ல் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதிவரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மனுதாரர் தங்கள் விண்ணப்பத்துடன், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், சுயமுகவரியிட்ட அஞ்சல் அட்டையுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம்.

courtesy.dinamalar

No comments: