திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இணைய தளம் துவக்கம்


தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ்துறையில் தனியாக இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி., கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் என அனைத்து உயர் அதிகாரிகளையும் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிப்பதற்காக இந்த இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.அனைத்து போலீஸ் அதிகாரிகளின் மொபைல் எண்கள்,போலீஸ் ஸ்டேஷன்களின் டெலிபோன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல், ஆன் லைனில், வீட்டிலிருந்த படியே இந்த இணையதளத்தின் மூலம் புகார் அளித்து, போலீசார் எடுத்த நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்.மேலும் தேடப்படும் குற்றவாளிகள், தொலைந்து போன நபர்கள், அடையாளம் காண இயலாத இறந்து போனவர்களின் தகவல்கள் போட்டோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் சாலை போக்குவரத்து விதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தை(www.dindiguldistrictpolice.in)மாவட்ட எஸ்.பி., முத்துச்சாமி துவக்கி வைத்து கூறியதாவது:திருட்டு, கொள்ளை, ஈவ்டீசிங், சைபர் குற்றம், போதை முதலான குற்றங்களிலிருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் ஏராளமான தகவல்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நகர் பகுதிக்கு மட்டுமே இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.தற்போது தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதையும்அறியும் வகையில் போலீஸ்துறைக்கு தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

கொடைக்கானல், பழநி வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பு கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பிரச்னை மட்டுமல்லாமல், குடிநீர், ஆக்கிரமிப்பு, சாக்கடை பிரச்னைகளை கூட எங்களுக்கு தெரிவித்தால்,நாங்கள் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்து தீர்வு காண ஏற்பாடு செய்வோம். விபத்துக்கள் நடந்தால் உடனடி தகவல்கள் தெரிவிக்க, ஆம்புலன்ஸ், 108, ஹைவே பேட்ரோல் ஆகியவற்றின் எண்களும் தரப்பட்டுள்ளன.பொதுமக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி,குறைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்

மிகவும் உபயோகமான ஒன்று , ஏன் என்றல் மக்கள் நேரில் புகர் அளிக்க பயந்து கொண்டே பல குற்றங்களை காவல் துறைக்கு தெரிவிக்காமல் போய் விடுகிறனர் , இனி இணைய தளம் மூலம் மிக எளிதாக புகர் தெரிவிக்கலாம் , வீட்டில் இருந்தபடியே திருட்டு, கொள்ளை, ஈவ்டீசிங், சைபர் குற்றம், போதை போன்ற குற்றங்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடியும் .

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உபயோகமான ஒன்று இந்த இணையதளம் ,ஏன் என்றால் புதியதாக ஒரு சுற்றுலா இடத்திற்கு வரும்போது அங்கே யாரையும் தெரியாத போது , இணையதளம் மூலம் காவல் துறையை தொடர்பு கொள்வது மிகவும் சுலபமான ஒன்று . காவல்துறையின் இந்த நடவடிக்கையின் மூலம் மக்களுக்கும் , காவல்துறைக்கும் உள்ள இடைவெளி குறைந்து ,மக்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு நல்ல பாலமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

காவல் துறையின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது !.

நன்றி.
karurkirukkan.blogspot.com

Post a Comment

0 Comments