கண்டதாலா ? - கவிதைஎன்னை கவிஞன் ஆகியவள் நீ
காரணம் தெரியவில்லை ஒருவேளை
யாரை ஏமாற்றலாம் என்ற பார்வை
உன்னிடம் இல்லாமல் போனதால ?
இல்லை உன்பார்வையில் நான்
காமத்தை கண்டதாலா ?

இல்லை ஏதோ சொல்ல துடிக்கும்
உன் உதடுகளை கண்டதாலா ?
பொய் பேச வரும் உன்
கரு நிற கூந்தலை கண்டதாலா ?
உன்னை பார்த்து பொறாமை படும்
உன் மேலாடையை கண்டதாலா ?
ஒருவேளை பளிங்கு கற்களை
செதுக்கியது போல் உன் பற்களை
கண்டதாலா ? இவை அனைத்தும் இல்லை
பிறகு ?கடைசியில் கண்டு பிடித்து
விட்டேன் உன்னில் என் தாய்
முகத்தை கண்டதால் ! ?


இது என் முதல் கவிதை முயற்சி (சும்மா கிருக்கியிருகேன் ) , தவறு இருந்தால் திருத்தவும் , உங்களது கருத்துகளை கூறி இந்த புது கவிஞனை ஊக்கப்படுத்துங்கள் .
நன்றி .

இந்த படைப்பை 13.09.10 அன்று தமிழ் வலைப்பதிவுகளை அடையாளம் காட்டும் பகுதியில் வெளியிட்டு ஊக்கபடுதியதற்கு தினமணிக்கு நன்றி

2 comments:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

கவிதை அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

BOSS said...

நன்றி