பேருந்தில் பயணம் செய்வது என்பது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று , வயதானவர்களுக்கு மிகவும் கஷ்டமான ஒன்று , சென்னை போன்ற பெரிய நகரங்களில் காலை அலுவலகம் செல்லும் நேரங்களில் பேருந்தில் செல்வது மிகக்கடினமான ஒன்று , ஆனால் வேறு வழியில்லாமல் மக்கள் செல்கிறார்கள் . அப்படி செல்லும் போது பேருந்தில் நடக்கும் நிகழ்வுகளை காண மிகவும் ரசிக்கும் படியாகவும் , கோபப்படும் படியாகவும் இருக்கும் ,
தினமும் ஒரே பேருந்தில் ஒன்றாக வருபவர்கள் ஜோலியாக அரட்டை அடித்துக்கொண்டு வருவார்கள் , பெண்கள் ஒன்றாக அமர்ந்து நடத்துனரை கிண்டல் செய்து வருவதும் , சாப்ட்வேர் வெலைக்கு செல்லும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது செல் பேசியில் ஹெட் போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டு வருவார்கள் ,
சில பேர் டிக்கெட் வாங்காமல் வந்து மாட்டி கொள்வார்கள் அப்போது டிக்கெட் பரிசோதனை செய்பவருக்கும் அவருக்கும் சண்டை வரும் , பெண்கள் சீட்டில் ஆண்கள் அமர்ந்து விடுவார்கள் , அப்போது ஆண்களும் பெண்களும் சண்டை போடுவார்கள் சரியாக இந்த நேரம் பார்த்து நடத்துனர் வருவார் , அவரிடம் இந்த பஞ்சாயத்து போகும் ஆனால் அவர் என்றுமே பெண்களுக்கு ஆதரவாகவே முடிவு சொல்வார்.
வேலைக்கு செல்லும் இளைஞர்கள் தங்களது செல் பேசியில் சத்தமாக பாட்டு கேட்டுக்கொண்டு வருவார்கள் , அந்த பாட்டை பல பேர் உன்னிப்பாக கேட்டுக்கொண்டு வருவார்கள் .
வயதான பெரியவர்கள் அரசியல் பேசிக்கொண்டு வருவார்கள் , இளைஞர்களும் பெண்களை சைட் அடித்துக்கொண்டும் , கேலி பேசி கொண்டும் வருவதும் வாடிக்கை , ஆனால் சில காம வெறி பிடித்தவர்கள் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களை இடிப்பதும் , வேறு சில அருவருக்கதக்க செயல்களையும் செய்வார்கள் , ஆனால் பெண்கள் பாவம் தங்களது மானம் போய்விட கூடாதே என்பதற்காக அமைதியாகவே இருந்து விடுகிறார்கள் , இந்த செயல் ஆண்களுக்கு சாதகமாவே அமைந்து விடுகிறது
இந்த கும்பலில் தான் பேருந்தில் திருடுபவர்கள் வந்து திருடிவிட்டு சென்று விடுவார்கள் , பள்ளிக்கும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும் படியில் தொங்கியபடியே பயணம் செய்வார்கள் , பேருந்து ஓட ஓட ஏறுவது , தனது புத்தகத்தை பெண்களிடம் கொடுப்பதும் அவர்களுக்கு பிடித்த விஷயம் , அவர்களை மேலே வரச்சொல்லி யர்ர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம் .
காதலர் தினம் மற்றும் நண்பர்கள் தினம் , கல்லூரி தினம் என்று வந்து விட்டால் பேருந்து முழுவதிலும் காகிதங்கள் ஒட்டி அலங்காரம் செய்வதும் பார்க்க இன்னும் சுவாரசியமாக இருக்கும் .
பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது பழுது அடைந்து விடும் , எல்லோரும் கீழே இரங்கி நடத்துனரிடம் பயணசீட்டில் எழுதி வாங்கிக்கொண்டு வேறு பேருந்தில் செல்வதும் , பேருந்தில் ஒரு நாள் பார்த்த பெண்ணை பார்க்க தினமும் அதே பேருந்தில் செல்வதும் பார்கவே ஆச்சர்யமான ஒரு விஷயம் ,
ஆனால் வயதானவர்கள் பேருந்தில் நின்று கொண்டு வரும்போது மற்றவர்கள் எழுந்து சீட் கொடுக்க யோசிப்பது மிகவும் சோகமான ஒன்று ,
மொத்தத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி
0 Comments