அசுர வளர்ச்சியில் youtube

தேடல் சார்ந்த வர்த்தகத்திலும், இணையத்தில் வீடீயோ படங்கள் பிரிவிலும் தொடர்ந்து கூகுள் முன்னேறி வருகிறது. ஆனால், அதன் தற்போதைய இலக்கு, கூகுள் தளத்தில், 40 கோடி இந்தியர்களை இணைப்பதுதான். டேப்ளட் பிசி வழியாக கூகுள் தளங்களை நாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது சாத்தியமே என்று கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதால், இணையத்தைத் தேடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. யு ட்யூப்பினை அணுகுவோரில், 38 சதவீதம் பேர் மொபைல் போன் வழியாகவே வருகின்றனர். டேப்ளட் பிசி எண்ணிக்கை உயர்ந்து வருகின்ற அளவிற்கு, இணைய இணைப்பிற்கான அலைக்கற்றை திறன் உயர்வது மிக மெதுவாகவே நடைபெறுகிறது.
யு ட்யூப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டில், ஒரு மாதத்தில் சராசரியாக, ஒரு கோடியே 50 லட்சம் தனி நபர்கள், இத்தளத்தைப் பயன்படுத்தினார்கள். தற்போது இது 5 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது. யு ட்யூப்பில் கிடைக்கும்
இந்தியத் திரைப்படங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் முன்னணியில் இயங்கும் ஆறு டிவி சேனல்கள், யு ட்யூப்பிலும் இயங்குகின்றன. எனவே, டிவி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த பின்னர், மூன்று மணி நேரம் கழித்து, அந்நிகழ்ச்சியினை, யு ட்யூப்பில் பார்த்து ரசிக்கலாம்.
இவை தவிர இணைய தளத்திற்கென மட்டுமே பல நிகழ்ச்சிகள் வீடியோவாகத் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன. பல பெண்மணிகள், வீட்டில் இருந்தவாறே சமையல் குறிப்புகளைக் கூட நிகழ்ச்சிகளாகத் தயாரித்து, யு ட்யூப் தளத்திற்கு அனுப்பி, பணம் சம்பாதிக்கின்றனர். கூகுள் அனைத்து தர மக்களையும் இணையத்தில் கொண்டு வர, மாநில மொழிகளை இணையத்தில் பயன்படுத்துவதனை எளிதாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

courtesy.dinamalar

Post a Comment

1 Comments

வியக்க வைக்கும் தகவல்களுக்கு நன்றி...