உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்

by 6:07 PM 1 comments
வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான்.

"நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன். இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகதில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள் குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை. 750 படங்களுக்கு இசையை அப்படித்தான் அமைத்திருக்கிறேன். 

இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது. இசை அமைப்பின் வேலைகளை கம்ப்யூட்டர் செய்து விடுவதால் இசை அமைப்பாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். அன்று நான் அரை மணிநேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்த பாடலை இன்று ரீகிரியேட் செய்ய இரண்டு நாட்கள் ஆகிறது. இப்போதுள்ளவர்கள் இது எப்படி அன்று உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதுவாக வந்தது, நான் உங்களுக்குத் தந்தேன். இது இறைவன் தந்தது வேறென்ன சொல்ல என்றார்.

cortesy.dinmalar

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.