அதி வேகத்தில் செயல்படும் புதிய இணையதள சேவையை (இன்டர்நெட் சேவையை) அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய இணையதள சேவையின் வேகம் குறித்த விஷயங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர குடியிருப்பு பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி வழங்கப்படும்.
மற்ற இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் ஃபைபர் இன்டர்நெட் சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த இணையதள சேவையின் வேகம் அல்ட்ரா-ஹை ஸ்பீட் என்று சொல்லப்படுகிறது. இதனால் நிச்சயம் பல மடங்கு வேகத்தில், இந்த இன்டர்நெட் சேவை இயங்கும் என்று கூறலாம்.
கூகுள் ஃபைபர் இணையதள சேவை ஒரு நொடிக்கு ஒரு ஜிகாபைட் வேகம் கொண்டு இயங்கும். இன்டர்நெட் சேவையின் மூலம் மக்கள் அதிக தகவல்களை பெற முடியும் என்பதைவிட, அந்த இன்டர்நெட் சேவை சிறந்த வேகத்தினை பெற முடியவில்லை என்பது மக்களின் பெரிய குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.
இந்நிலையில் அதி வேகம் கொண்ட இணையதள சேவையினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்கிறதென்றால், நிச்சயம் இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Comments