Facebook - mark zuckerberg- history


ஹவாட் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற Facebook நிறுவுனர் மார்க் சக்கர்பேர்க்கின் சொத்துக்கள் 17.5 பில்லியன்கள் எனக் கணக்கிடப்படுகின்றது.
அத்துடன் இவரது வாழ்வுபற்றிப் படமெடுப்பதற்கும் ஹொலிவூட் தயாராவதாகக் கதைகள் உலாவுகின்றன. தற்போது இவரது வாழ்நாள் ஆவணமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
1984 – நியூயோர்க்கின் White Plains இல் பல்வைத்தியர் மற்றும் மனோதத்துவ நிபுணராகப் பணியாற்றிய ஒருவரின் ஒரே மகனாகப் பிறந்தார். இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.
2002- நியூ ஹம்ஸயரிலுள்ள தனியார் பள்ளியொன்றான Phillips Exeter Academy என்ற பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார். பின்னர் ஹவாட் பல்கலைக்கழகத்தில் மனோதத்துவம் மற்றும் கணினி அறிவியல் பற்றிய துறையில் இணைந்து கற்றார்.
2003 – Facemash என்ற இணையத்தள நிகழ்ச்சிநிரலை வெளியிட்டார். இதனை ஹவாட் மாணவர்களிடையே ஒரே பால் மாணவர்களின் படங்களை ஒப்பிட்டு யார் கவர்ச்சியானவர்கள் எனத் தரம்பிரிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள உருவாக்கினார்.
இதன் உடனடியான புகழினால் பல்கலைக்கழக நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்து உடனடியாகவே நிறுத்தப்பட்டது.
2004 – பெப்ரவரியில் Thefacebook.com என்ற இணையத்தளத்தினை ஆரம்பித்தார்.
2004 – தனது இரண்டாம் வருடப் படிப்பின் இறுதியில் ஹவாட் பல்கலைக்கழகத்திலிருந்து விலகி Palo Alto என்ற இடத்திற்குச் சென்று ஒரு வீட்டை வாங்கினார். இவ்வீட்டிலுள்ள ஒரு நீச்சல் தடாகம் தற்போது மிகவும் புகழ்பெற்றுவிட்டது.
2004 – 200,000 பயனாளர்களைத் தொட்டது Facebook. கணினி உலகின் திட்டவல்லுநர்களுடன் தொடர்புகொண்டு அரைமில்லியன் டொலர்களை ஆரம்ப இலாபமாகப் பெறுகின்றார். இதில் சிறிதளவை சீன உணவுவிடுதிக்கு மேலே சிறியதொரு அலுவலகத்தினை உருவாக்கப் பயன்படுத்தினார்.
2004 - புதியதொரு சமூக வலைத்தளமான HarvardConnection (பின்னர் ConnectU) என்ற தமது எண்ணத்தினைக் களவெடுத்துவிட்டதாக சக்கர்பேர்க் மீது Winklevoss இரட்டையளர்கள் வழக்கொன்றை மேற்கொண்டனர்.
2005 – 5 மில்லியன் பயனாளர்களை Facebook தொட்டது.
2006 – 22 வயதில் சக்கர்பேக், Yahoo விடமிருந்து Facebook இற்காக 1 பில்லியன் உதவியைப் பெற்றார். 
2007 – பல்கலைக்கழகத்திற்கும் அப்பால் மின்னஞ்சல் உள்ளவர்கள் எவரும் பயன்படுத்தலாமென்ற முறையை Facebook இல் திறந்தார். இதற்காக மைக்ரோசொப்ற்ரிலிருந்து 15பில். உதவி கிடைத்தது. இதனால் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் மட்டும் 4பில். டொலர் கிடைத்தது.
2007 – சுயமாக மென்பொருள் எழுதுபவர்களை Facebook இல் அனுமதித்தார். ஆனால் Beacon என்ற மென்பொருள் வெளிவந்தபோது தமது நண்பர்கள் எவற்றை ஒன்லைனில் வாங்குகின்றார்கள் என்பதை மற்றவர்களால் பார்க்கக்கூடியதாயிருந்த நிலையை இது தந்ததால் தனிநபர் விடயங்களில் தலையிடுவதாகக் கூறி பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.
2008 – 65மில். டொலர் பெறுமதியான Winklevoss வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்தார். எனினும் இன்னமும் தான் எந்தவொரு சொத்துத்திருட்டினையும் செய்யவில்லையென்றே மறுத்துவருகின்றார்.
2009 –வீட்டுப் பாவனையில் Facebook இனை சீனா தடுத்தது.
2010 – இவ்வருடத்தின் Time சஞ்சிகையின் நபராக இவரைத் தெரிவுசெய்தது.
2010 – The Social Network என்ற ஆவணப்படத்தினை ஹொலிவூட் திரையுலகம் வெளியிட்டது. இதில் சக்கர்பேர்க்கின் ஹாவட் பல்கலைக்கழக வாழ்க்கை மற்றும் Facebook இன் ஆரம்பகாலங்கள்பற்றிக் காட்டப்படுகின்றன.
2011 – Saturday Night Live என்ற நிகழ்ச்சியில் விவரணத்தில் நடிகராக நடித்த ஜெசி ஈசின்பேர்க்கினால் பேட்டிகாணப்பட்டார்.
2011 - ஒரு நாளில் Facebook அரைமில்லியன் பயனாளர்களைத் தொட்டது. இதற்கு வரியாக 4பில். டொலர் எதிர்பார்க்கப்பட்டது. இது முந்தைய வருடத்தை விடவும் இரண்டு மடங்காகும்.
2012 – ஒரு பில். பயனாளர்களை அடைந்தது. 100பில். டொலர்களைப் பெறலாமென பங்குச்சந்தை நிலைவரம் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

1 Comments

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"