சாலைகளை மேம்படுத்த, 1,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு


ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5,340 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த, 1,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், இதர மாவட்ட சாலைகள் ஆகியவையில் சாலை அமைத்தல், விரிவுபடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனைக் கூட்டம் : இதுகுறித்து, கடந்த 23ம் தேதி, ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டிய, 267 பாலப் பணிகளில், 145 பணிகள் முடிவடைந்துள்ளன. 94 பாலப் பணிகள், தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அதோடு, அறிவிக்கப்பட்டு, இன்னும் துவங்கப்படாத நிலையிலுள்ள, 24 பாலப் பணிகளை விரைவில் துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பழனிசாமி பேசினார்.
உத்தரவு : நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 37 டிவிஷன்களிலும், சாலைப் பணிகள் மற்றும் பாலங்கள், சிறுபாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு, அடுத்த மாதத்திலிருந்தே பணிகளை துவங்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே!