செப்டம்பர் 11 தாக்குதல்:


2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூர்க் நகரிலும் பிற இடங்களிலும் விமானங்களைக் கடத்தி வந்து கட்டிடங்கள் மீது மோதி பயங்கரவாதிகள் செய்த தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகில் பல இடங்களில் நினைவுச் சடங்குகள் நடந்திருந்தன.

இத்தாக்குதலில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் உயிரிழந்திருந்தனர்.

இத்தாக்குதலின்போது இரண்டு விமானங்கள் மோதி நிர்மூலமாகப்பட்டிருந்த நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் நின்றிருந்த இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் நடந்த சடங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார் புஷ் ஆகியோர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வருடா வருடம் நடந்துவந்ததுபோல உயிரிழந்தவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வாசிக்கின்ற சடங்கும் அங்கு நடந்திருந்தது.

நியூயார்க் மட்டுமின்றி, விமானம் வந்து மோதிய இடமான அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகானிலும், இன்னொரு விமானம் தரையில் விழுந்த இடமான பென்சில்வேனியா மாகாணத்து ஷாங்க்ஸ்வில்லிலும் நினைவுச் சடங்குகள் நடந்தன.

நூறு நாடுகளுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

இவர்களை நினைவுகூரும் வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் ஆகிய ஊர்களிலும் சடங்குகள் நடந்திருந்தன.

இத்தாலியில் போப்பாண்டவர் தலைமையில் விசேட பிரார்த்தனையும் நடந்துள்ளது.

Post a Comment

0 Comments