ஒரு பசுவின் இரத்தக்குழாயின் உதவியோடு ஒரு பச்சிளங்குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர் சவுத்ஹெம்ப்டன் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்கள்.
இரட்டைக் குழந்தைகளுள் ஒன்றான ஹனா என்ற குழந்தைதான் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை 28 வாரத்தில் பிறந்த குறைமாதக் குழந்தையாகும்.குழந்தையின் பிறப்பு எடை இரண்டு இறாத்தல்களும் நான்கு அவுன்ஸுகளும் மட்டுமே. மிக அரிய வகையான ஒரு இருதயக் கோளாறும் காணப்பட்டது.
இந்தக் குழந்தை பெரும்பாலும் இறந்து விடக்கூடும் என்றே டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இருதயத்துக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய் போதிய வளர்ச்சியடையவில்லை என்பதை டாக்டர்கள் பின்னர் கண்டுபிடித்தனர்.
இருதயத்திலிருந்து வரவேண்டிய இரு நாளங்களுள் ஒன்று மட்டுமே வளர்ச்சியடைந்திருந்தது. இதனால் அதிகளவு குருதி நுரையீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தக் குழந்தைகளின் தாய்க்கு 20 வாரம் வரை பிரசவத்தில் பிரச்சினைகள் இருக்கவில்லை. அதன் பிறகு ஹனாவுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை காணப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த இரட்டைப் பிரசவம் இடம்பெற்றது. உடனடியாக முதல்கட்ட சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மாதங்களின் பின் குழந்தையின் தேக நிலை ஓரளவு சீரடைந்ததும் குழந்தை ஹனாவைக் காப்பாற்ற டாக்டரகள் பல வழிகளை யோசித்த பின் முன்னோடி திட்டமொன்றின் கீழ் பசுவின் இரத்தக்குழாயிலிருந்து உருவாக்கப்பட்ட நாளம் இந்த சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
1 Comments