ரெயில் பயணம்: அசல் அடையாள சான்று அவசியம்

ரெயில் பயணத்தின்போது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வருமான வரித்துறை வழங்கும் நிரந்தர கணக்கு எண், டிரைவிங் லைசென்சு, மத்திய- மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பாஸ் புக், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அட்டைகள், பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை ஆகிய 8 சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்.

ஆனாலும் தட்கல் டிக்கெட் டுக்கு முன்பதிவு செய்யும்போது கவுண்டரில் எந்த அடையாள சான்றையும் காண்பிக்க தேவையில்லை. பயணத்தின்போது டிக்கெட் டுக்கு உரிய பயணிகளில் யாராவது ஒருவரது அடையாள சான்றிதழை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.

அவ்வாறு அடையாள சான்றை காட்டத் தவறினால் அந்த டிக்கெட்டுக்கு உரிய பயணிகள் அனைவரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக கருதப்பட்டு அவர்களிடம் கூடுதல் கட்டணம் மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.

No comments: