ஒரே நேரத்தில் 614 பேருடன் செஸ்

ஈரானின் 28 வயது இளைஞர் ஒரே நேரத்தில் 24 மணி நேரத்திற்குள் 614 பேருடன் செஸ் விளையாடி உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் வீரரின் சாதனையை தகர்த்துள்ளார்.ஈரானின் தலைநகர் டெஹரானில் உள்ள ஷாகித் பஹிஷீத் பல்கலை.யில் மெகா செஸ் போட்டிகள் நடந்தன. இதில் ஈரானின் கிராண்ட் மாஸ்டர் ஈஷான் காஹிம் மெகாமி (28) என்பவர் ஒரே நேரத்தில் 24 மணி நேரத்திற்குள் 614 பேரிடம் செஸ் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். இதில் நடந்த மொத்தம் 614 போட்டிகளில் 580 பேரை வென்றார். 8 பேரிடம் ‌தோல்வியுற்றார். 16 போட்டிகளை டிரா செய்தார். இதன் மூலம் அதிகம் பேரிடம் செஸ் விளையாடி இஸ்ரேல் கிராண்ட் மாஸ்டர் அலிக் கெர்‌ஸோனின் (30). சாதனையை முறியடித்தார். முன்னதாக இஸ்ரேலின் கிராண்ட் மாஸ்டர் அலிக்கெர்ஸோன் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மெகா செஸ் போட்டியில் 25 மணி நேரத்திற்குள் 524 பேருடன் செஸ் விளையாடினார். இதில் 454 போட்டிகள் வெற்றி, 11 பேரிடம் தோல்வியுற்றார், 58 போட்டிகளை டிரா செய்தார். இப்போட்டியில் இதே ஈரானின் மற்றொரு கிராண்ட் மாஸ்டரன மொர்டிஸாமெர்ஜூப்(30) என்பவரின் சாதனை முறியடித்திருந்தார். தற்போது அலிக்கெர்ஸோனின் 13 மாத கால சாத‌னையை ஈஷான்காஹிம் மெகாமி முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். எதிரி நாடுகள் என கூறப்படும் இஸ்ரேல், ஈரான் செஸ் போட்டியிலும் எதிரிகளாக தான் சித்தரிக்கப்பட்டு சாதனைப்படைக்க தீவிரம் காட்டியுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுளளது. இவரது சாதனையை கின்னஸ் சாதனை அமைப்பின் பிரதிநிதி டெம்மின்பீல்டு கூறுகையில், மெகாமியின் சாதனை குறித்து தகுந்த ஆதராங்கள் சமர்பிக்கப்பட்டால் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.