அமெரிக்காவின் முன்னேற்ற பாதை

2010ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், புதிய வேலைவாய்‌ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 1,03,000 பேருக்‌கு வேலை கிடைத்திருப்பதாகவும், இதன்மூலம், வேலையில்லாத் திண்டாட்டம் 9.4 சதவித அளவிற்கு குறைந்திருப்பதாக அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்த நலத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 2009ம் ஆண்டு, மே மாதம், அமெரி்க்க வரலாற்றில் சோதனைக் காலம் என்‌றே கூறலாம். தற்போது, அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில், 1,50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் 1,03,000 என்ற அளவிற்கே வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில், 9.8 சதவீதமாக இருந்த வேலைவாயப்புத் திண்டாட்டம், டிசம்பரில் 9.4 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில், ஹாஸ்பிடாலிட்டி, லீசர் மற்றும் ஹெல்த்கேர் பிரிவுகளில் பணிவாய்ப்புகள் அதிகரித்தது. டிசம்பர் மாத துவக்கத்தில் 14.5 மில்லியன் என்ற அளவில் இருந்த வேலைவாய்ப்பு இல்லாதோர், மாதமுடிவில் 5,56,000 என்ற அளவில் குறைந்துள்ளதாகவும், வேலைவாயப்புத் திண்டாட்டத்தில் ஆண்களிடையே 9.4 சதவீதமாகவும், பெண்களில் 8.1 சதவீதமாக உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: