உள்ளாடை மட்டும் அணிந்து வந்து ஷாப்பிங்-18 + மட்டும்

ஸ்பெயின் நாட்டின் குளிர்கால ஷாப்பிங்கை படு வித்தியாசமாக தொடங்கியுள்ளனர் அங்குள்ள டெசிகுவல் என்ற ஆடைவிற்பனை நிறுவனத்தினர்.இந்த நிறுவனம் ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் ஏராளமான கடைகளை நடத்தி வருகிறது. குளிர்கால ஷாப்பிங் ஸ்பெயினில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த குளிர்கால ஷாப்பிங்கை வித்தியாசமாகவும், அதேசமயம், அதிக விற்பனையைக் காணும் வகையிலும் நடத்த முடிவு செய்த டெசிகுவல் நிறுவனம் வித்தியாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

தனது நிறுவனக் கிளைகளில் முதல் நாள் விற்பனை இலவசம். முதலில் வரும் 100 பேருக்கு இந்த சலுகை. ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே. ஷாப்பிங் செய்ய வருவோர் பிரா மற்றும் ஜட்டி ஆகியவற்றை மட்டுமே அணிந்திருக்க வேண்டும். வேறு ஆடைகளுடன் வரக்கூடாது. இந்த உடைகளுடன் வந்து ஷாப்பிங் செய்யலாம். அனைத்தும் இலவசம் என்று கூறியது அந்த அறிவிப்பு.அவ்வளவுதான் நூற்றுக்கணக்கானோர் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல், ஜட்டி பிரா மட்டும் அணிந்தபடி கடைகள் முன்பு குழுமி விட்டனர்.சொன்னபடி ஜட்டி, பிராவோடு வந்திருக்கிறார்களா என்பதைப் பார்த்து முதல் 100 பேரை மட்டும் கடைக்குள் அனுப்பினர் கடை ஊழியர்கள். அவர்களில் முக்கால்வாசிப் பேர் இளம் பெண்கள் , இளைஞர்கள்தான்.



பிறகென்ன உள்ளே நுழைந்த அரைகுறை உடை அணிந்த ஸ்பெயின் இளைஞர்களும், யுவதிகளும் தங்களுக்குப் பிடித்த உடைகளை எடுத்து பையில் போட்டுக் கொண்டும், சிலர் அணிந்து கொண்டும் குஷியோடு வெளியேறினர்.மாட்ரிட், பார்சிலோனா, சென் செபாஸ்டியன், மார்பெல்லா ஆகிய நகரங்களில் இந்த கவர்ச்சிகரமான களேபர விற்பனை நடந்தேறியது.ஜட்டி மட்டும் அணிந்து வந்த ஆண்களுக்கு ஒரு டீசர்ட், ஜீன்ஸ் இலவசமாக அனுமதிக்கப்பட்டது. பிரா, பேன்டீஸுடன் வந்த பெண்களுக்கு பிளவுஸ் அல்லது டீசர்ட், அதேபோல கால்சட்டை அல்லது மினி ஸ்கர்ட் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டன.ஸ்பெயின் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. ஐரோப்பிய யூனியனிலேயே அதிக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments