பேஸ் புக்கில் விவாகரத்து : அமெரிக்கா தகவல்

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம்.இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ் புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ் புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ் புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20 சதவீதம் பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விப்ரோ நிறுவனம் கல்விக்காக 2 பில்லியன் டாலர் உதவி

இந்தியாவின் முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக 2 பில்லியன் டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான ஆசிம் பிரேம்ஜி ஆசிம் பிரேம்ஜி பவுண்டேசன் மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள கல்விநிலையங்களுக்கு வழங்குகிறார். இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 846 கோடியாகும். முதல் கட்டமாக சுமார் 700 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ஆசம் பிரேம்ஜி பவுண்டேசன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பவுண்டேசன் மூலம் உருவாக்கப்படும் பல்கலை மூலம் 2011 கல்வி யாண்டில் 200 மாணவர்களும், அடுத்துவரும் நான்கு முதல் ஐந்தாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் என உயரும் என பவுண்டேசன் அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments: