சீனத் தயாரிப்புகள் என்றால் முன்பெல்லாம் மட்டமாகப் பார்ப்பார்கள். ஆனால் இன்று

மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் முன்பெல்லாம் மட்டமாகப் பார்ப்பார்கள். ஆனால் இன்று அந்த மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.அது மட்டுமல்ல, பெரிய பிராண்டட் மொபைல் நிறுவனங்களே சீனத் தயாரிப்புகளைப் பார்த்து தங்கள் மாடல்களை மறுவடிவம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.முதல் முதலாக இந்திய மொபைல் சந்தையில் இரட்டை சிம் கார்ட் வசதி கொண்ட போன்கள் வந்த சீனாவிலிருந்துதான். அதன் பிறகு சாம்சங்கும் நோக்கியாவும் போட்டிபோட்டுக் கொண்டு இரட்டை சிம் வசதி கொண்ட போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.பொதுவாக பிராண்டட் மொபைல்களில் ஹை எண்ட் மாடல்கள் என்று போனால் குறைந்தபட்சம் ரூ 10000-க்கு மேல் செலவழிக்க வேண்டும். அப்போதுதான் ஜிபிஆர்எஸ், பிராட்பேண்ட், ஃபேஸ்புக் அக்ஸஸ் என பல பல வசதிகள் கிடைக்கும். ஆனால் இத்தனை வசதிகளையும் ரூ 2000 -லேயே பெற முடியும் ஜி பைவ் உள்ளிட்ட சீன மாடல்களில்.இதன் விளைவு, இந்திய மொபைல் மார்க்கெட்டில் அசைக்க முடியாத பிராண்டுகளாகத் திகழ்ந்த நோக்கியா, சாம்சங் இரண்டுமே ஆட்டங்கண்டு போயுள்ளன. சமீபத்திய சந்தை கணக்கெடுப்புகளின்படி இந்திய மொபைல் சந்தையில் இரண்டாம் இடம் வகிப்பது ஒரு சீனத் தயாரிப்பு மொபைல்தான். அது ஜி பைவ்.இந்த அந்தஸ்தில் இதுவரை கோலோச்சி வந்தது கொரிய நிறுவனமான சாம்சங். இப்போது சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது ஜி பைவ்.

2010- காலண்டர் ஆண்டில் மொபைல் போன் கருவிகள் விற்பனை விவரங்களின் அடிப்படையில், இந்திய சந்தையில் நோக்கியா முதலிடத்தில் உள்ளது. அதன் மார்க்கெட் அளவு 31.5 சதவீதம். ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீதம் குறைவாகும். இந்த 5 சதவீதத்தைக் கைப்பற்றி இருப்பது ஜிபைவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த சாம்சங் 8 சதவீதத்துடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இப்போதைய நிலவரப்படி 10.6 சதவீத மார்க்கெட் ஷேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது ஜி பைவ்.

மிகக் குறைந்த விலையில் ப்ளாக்பெரி மாடலில் உள்ள அத்தனை வசதிகளோடும் ஜிபைவ் மொபைல்கள் கிடைப்பதால், மக்கள் நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல்களை விட்டு, ஜி பைவுக்குத் தாவி விடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிபைவ் மாடலில், அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போனின் அதிகபட்ச விலையே ரூ 3000 தான் என்பது குறிப்பிடத்தக்கது

2 comments:

பாண்டிச்சேரி வலைப்பூ said...

பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

karurkirukkan said...

தங்கள் வருகைக்கு நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்