பாங்க் ஆஃப் அமெரிக்கா கலக்கம் (விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு)

by 12:43 PM 0 comments


விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு, தனது கணக்குகளை முடக்கியதோடு, இதர நிதி ஆதாரங்களையும் தடுத்து வைத்துள்ள பாங்க் ஆஃப் அமெரிக்கா எனத் தெரிய வந்துள்ளது.
இந்த வங்கி குறித்து ஏற்கெனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறுகையில், 'எங்களிடம் அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியுடைய 5 ஜிபி ஆவணங்கள் உள்ளன', என்றார்.அமெரிக்காவின் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருப்பவை மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் விவிஐபிக்களாகும். இவர்களைப் பற்றி அந்த வங்கி என்ன கருத்து தெரிவித்துள்ளது என்பதை இப்போது வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் கூறியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு.

மேலும், இந்த வங்கி இதுவரை வசூலாகாத நிலுவைக் கடன்கள், ரகசியமாய் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் போன்றவை குறித்தெல்லாம் விக்கிலீக்ஸ் வசம் ஆவணங்கள் உள்ளதாகத் தெரிகிறது.மேலும் சமீபத்திய நெருக்கடியின்போது, கடன் செலுத்த முடியாத நிறைய வாடிக்கையாளர்களின் வீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டன அமெரிக்க வங்கிகள். சட்டப்படி, இப்படி எடுத்துக் கொள்ள அமெரிக்க வங்கிகளுக்கு அனுமதி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும் ஆவணங்களையும் வெளியிடப்போகிறார்களாம்.இந்த தகவலை மட்டும் வெளியிட்டால், அமெரிக்க வங்கித் துறை மீண்டும் பெரும் நெருக்கடிக்குள்ளாகும் என்று அச்சம் தெரிவித்துள்ளன பல்வேறு வங்கிகளும்.

ஆனால் பாங்க் ஆப் அமெரிக்காவோ இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'விக்கிலீக்ஸ் எங்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. இந்த வங்கியின் ஆவணங்களை யாரும் களவாட முடியாது', என்று கூறியுள்ளது.சிட்டி குழுமம், ஜேபி மார்கன், கோல்ட்மென் சாஷ், மெரில் லிஞ்ச் மற்றும் ஏஜி போன்ற நிறுவனங்கள் திவாலானது, அவற்றை மீட்க அளிக்கப்பட்ட நிதி உதவிகள் ஆகியவற்றின் பின்னணி குறித்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: